Friday, September 19, 2008

முரண்பாடு

இயற்கையின் முரண்பாடு
பெண்
உலகில் உள்ள
உயிரினங்களில்
ஆண்களே அழகு
மனித இனத்தை தவிர

Sunday, September 7, 2008

கடன்பட்டார் நெஞ்சம்போல

காலையில் கண் விழித்து எழுந்ததும்
மனைவி கேட்டாள்
மளிகை வாங்க காசு வேனும்
மகன் கேட்டான்
அப்பா பள்ளி கட்டணம் என்றான்
கடைக்கு சென்றால்
வாடகை கேட்டு ஒருவர்
சம்பளம் கேட்டு கடை பையன்
இதற்காக கடன் வாங்கி
தொழில் நடத்த கடன் வாங்கி
மொய் வைக்க கடன் வாங்கி
கடன் வாங்கி கடன் வாங்கி
கலைத்துபோய்
கடன் பட்டார் நெஞ்சம்போல
கலங்கினான் குடும்பதலைவன்

Thursday, September 4, 2008

மார்டன் கேர்ள்

அழகு காட்டும் போட்டிக்கு

அளவு காட்ட செல்பவள் போல்

அரைகுறை ஆடையில் நீ இருந்த போது

உன்

தொடையழகை ரசித்தவர்களின்

தொகையறாகளை முழுவதுமாக

தொகுத்தளிக்க முடியவில்லை

இருந்தாலும் ஒன்றிரண்டு

சொல்கிறேன் கேள் . . .

காலாடை அணியாமல்

அரையாடை அணிந்த நீ

அழகு பெண்ணல்லவா

திருந்தாத உடம்பின் மேல்

பொருந்தாத உடை

பொழுது போனதும்

கதற போகின்றது

நீ பிறந்த வீட்டின்

பிடியளவு நுழைவாயில் மூடும்

கலரான ஆடை கன்கொள்ளா காட்சியாம்

தொழிலாளி

தினமும் வியர்வை சிந்தி உழைக்கும் வர்க்கம்
பட்டினியால் வாடும் வர்க்கம்
கொடி பிடிக்கவே தெரிந்த வர்க்கம் என பேசப்படும் வர்க்கம்
தொழிலாளி . . . .