அழகு காட்டும் போட்டிக்கு
அளவு காட்ட செல்பவள் போல்
அரைகுறை ஆடையில் நீ இருந்த போது
உன்
தொடையழகை ரசித்தவர்களின்
தொகையறாகளை முழுவதுமாக
தொகுத்தளிக்க முடியவில்லை
இருந்தாலும் ஒன்றிரண்டு
சொல்கிறேன் கேள் . . .
காலாடை அணியாமல்
அரையாடை அணிந்த நீ
அழகு பெண்ணல்லவா
திருந்தாத உடம்பின் மேல்
பொருந்தாத உடை
பொழுது போனதும்
கதற போகின்றது
நீ பிறந்த வீட்டின்
பிடியளவு நுழைவாயில் மூடும்
கலரான ஆடை கன்கொள்ளா காட்சியாம்

No comments:
Post a Comment